"அக"விதைகள்

Tuesday, September 21, 2004

நீட்டிக்கப்படும் உயிர்வாழ்க்கை

காலையிலிருந்துவானொலிஅலறிக்கொண்டிருக்கிறது. மீண்டுமொருமுறை உயிர்வாழும் உரிமை எங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறதாம். தொலைக்காட்சியில் கூட அடிக்கடி காட்டினார்கள். சிரித்த முகத்துடன் தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள். தேவதைகள் ஆசீர்வதித்தன. தேவர்கள்பூமாரி பொழிந்தனர். வானத்திலிருந்து அசரீரியாய் வானொலி பெருங்குரலெடுத்து அலறியது. சமாதான முன்னெடுப்பாய் உயிர்வாழும் உரிமை எங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாம். இப்போதைக்கு உயிர்வாழ மட்டுமேஅனுமதி. படிப்படியாக வெளியே நடமாடவும் பிற செயற்பாடுகளுக்கும் அனுமதி கிடைக்கும், அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டார்கள். இப்படியாக வானொலியும்தொலைக்காட்சியும் சேதி சொன்ன காலையொன்றில், பக்கத்து வீட்டண்ணன் சுடப்பட்டிறந்தான். "ஒருவேளை உயிர்வாழ்வதற்கானஅவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்." தன்னைத்தானேதேற்றிக்கொள்ளும் அவனது தந்தை!

3 Comments:

 • காணாமப் போனதைக் கண்டுபிடிச்சீர்போலை :-)

  By Blogger -/பெயரிலி., at 10/19/2007 12:28:00 PM  

 • //காணாமப் போனதைக் கண்டுபிடிச்சீர்போலை :-)//


  ஏதாவது பாஸ்வேட் பிரச்சனையா?

  பாஸ்வேட் மறந்துவிட்டதா? இல்லை பாஸ்போட் பிரச்சனையா அணுகுங்கள் தீவை .

  பாஸ்வேட் பிரச்சனையாயின் புதிய பதிவு திறந்து தரப்படும்.

  பாஸ்போர்ட் பிரச்சனையாயின் மாலனிடம் அனுப்பிவைப்போம்.

  எமக்கு எங்கும் இடைத்தரகர் இல்லை
  என்பது எமது பலம்


  தொடர்பு கொள்க

  தொழிலதிபர் தீவு

  By Blogger theevu, at 10/19/2007 01:28:00 PM  

 • தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  By Blogger www.bogy.in, at 4/14/2010 05:59:00 AM  

Post a Comment

<< Home